கோவை மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர்‌ பட்டியல் வெளியீடு..!

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட 10-சட்டமன்ற தொகுதிகளுக்கு 14.02.2020ன் படி இறுதி வாக்காளர்‌ பட்டியலை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று(14.02.2020) அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ முன்னிலையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி வெளியிட்டார்‌.


கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட 10-சட்டமன்ற தொகுதிகளுக்கு 14.02.2020ன் படி இறுதி வாக்காளர்‌ பட்டியலை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று(14.02.2020) அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ முன்னிலையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி வெளியிட்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராம துரைமுருகன்‌, மாநகராட்சி துணை ஆணையர்‌ பிரசன்னா ராமசாமி, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ சுரேஷ்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌(தேர்தல்‌) முத்துராமலிங்கம்‌, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவிக்கையில்‌;-

கோவை மாவட்டத்தில்‌ பெறப்பட்ட விண்ணப்பங்களின்‌ அடிப்படையில்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌ திருத்தல்‌ போன்ற பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு இன்று கோவை மாவட்டத்தில்‌ உள்ள பத்து சட்டமன்றத்‌ தொகுதிகளின்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியல்‌ வெளியிடப்பட்டது.

அதன்படி, தற்போது 14.02.2020 தேதியில்‌ வெளியிடப்படும்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியலின்படி கோவை மாவட்டத்தில்‌ 14,79,786 ஆண்கள்‌ 15,11,767 பெண்கள்‌ மற்றும்‌ இதரர்‌ 370 ஆக மொத்தம்‌ 29,91,923 வாக்காளர்கள்‌ உள்ளனர்‌. 18-19 வயது நிறைவடைந்த இளம்‌ வாக்காளர்கள்‌ 23,878 புதிதாக வாக்காளர்‌ பட்டியலில்‌ பதிவு செய்யப்பட்டுள்ளனர்‌. புதிய வாக்காளர்களை சேர்க்க தேர்தல்‌ ஆணையம்‌ முனைப்புடன்‌ செயல்படுவதைப் போலவே, நீக்கம்‌ செய்யப்பட வேண்டிய வாக்காளர்களின்‌ விவரங்களையும்‌ முறையான ஆவணங்கள்‌ அடிப்படையில்‌ நீக்கம்‌ செய்ய அலுவலர்கள்‌ கவனமுடன்‌ செயல்பட்டு வருகின்றனர்‌.

கோவை மாவட்டம்‌, 1 11-மேட்டுப்பாளையம்‌ சட்டமன்ற தொகுதியில்‌ 1,40,766 ஆண்கள்‌, 1,48,597 பெண்கள்‌, 32 மற்றவர்‌ என 2,89,395 வாக்காளர்களும்‌, 116-சூலூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ 1,52,251 ஆண்கள்‌, 1,57,327 பெண்கள்‌, 28-மற்றவர்‌ என 3,09,606 வாக்காளர்களும்‌, 117-கவுண்டம்பாளையம்‌ சட்டமன்ற தொகுதியில்‌ 2,22,804 ஆண்கள்‌, 2,22,764 பெண்கள்‌, 83-மற்றவர்‌ என 4,45,651 வாக்காளர்களும்‌, 118-கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில்‌ 1,64,844ஆண்கள்‌ 1,62,554 பெண்கள்‌, 33-மற்றவர்‌ என 3,27,431 வாக்காளர்களும்‌, 119-தொண்டாமுத்தூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ 1,57,635) ஆண்கள்‌, 1,59,305 பெண்கள்‌, 76-மற்றவர்‌ என மொத்தம்‌ 3,17016 வாக்காளர்களும்‌, 120-கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில்‌ 1,24,783 ஆண்கள்‌, 1,24,788 பெண்கள்‌, 19-மற்றவர்‌ என மொத்தம்‌ 2,49,590 வாக்காளர்களும்‌, 121-சிங்காநல்லூர்‌ சட்மன்ற தொகுதியில்‌ 1,56,759 ஆண்கள்‌, 1,58,112 பெண்கள்‌, 22 - மற்றவர்‌ என மொத்தம்‌ 3,14,893 வாக்காளர்களும்‌, 122-கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில்‌ 1,53,232 ஆண்கள்‌, 1,57,121 பெண்கள்‌, 34 - மற்றவர்‌ என மொத்தம்‌ 3,10,787 வாக்காளர்களும்‌, 123-பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில்‌ 1,08,575 ஆண்கள்‌, 1,15,993 பெண்கள்‌, 25-மற்றவர்‌ என மொத்தம்‌ 2,24,593 வாக்காளர்களும்‌, 124-வால்பாறை சட்டமன்ற தொகுதியில்‌ 98,137 ஆணிகள்‌, 1,04,806 பெண்கள்‌, 18- மற்றவர்‌ என மொத்தம்‌ 2,02,961 வாக்காளர்கள்‌ என மொத்தம்‌ 14,79,786 ஆண்கள்‌ 15,11,7/67 பெண்கள்‌ மற்றும்‌ இதரர்‌ 370 ஆக மொத்தம்‌ 29,91,923 வாக்காளர்கள்‌ உள்ளனர்‌.

கோவை மாவட்டத்தில்‌ வாக்காளர்‌ பெயர்‌ பட்டியலிருந்து 2,179 இறந்துபோன வாக்காளர்கள்‌, 2,953 இடம்பெயர்ந்த வாக்காளர்கள்‌, ஒரே நபருக்கு ஒன்று மேற்பட்ட பதிவுகள்‌ உள்ள 6,92 வாக்காளர்கள்‌ என மொத்தம்‌ 5,824 வாக்காளர்கள்‌ நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.

23.12.2019 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்‌ பட்டியலின்‌ படி கோவை மாவட்டத்தில்‌ 29,23,837 வாக்காளர்கள்‌ இருந்தனர்‌. இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ வழிகாட்டுதல்களின்படி, வாக்காளர்‌ பட்டியல்‌ திருத்தம் செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்றது. அதனடிப்படையில்‌, வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌, முகவரி மாற்றம்‌ செய்யும்‌ பணிகளுக்காக சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டன.

அதன்படி, வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்ப்பதற்கு, படிவம்‌ 6-இன்‌ மூலமாக 34,697 ஆண்கள்‌, 39,187 பெண்கள்‌ 26-மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ என மொத்தம்‌ 73,910 வாக்காளர்கள்‌ சேர்க்கப்பட்டுள்ளனர்‌. மேலும்‌, பதிவினை நீக்கம்‌ செய்ய படிவம்‌ 7-இனண்‌ மூலமாக 2942 ஆண்கள்‌, 2881 பெண்கள்‌ 1- மூன்றாம்‌ பாலினத்தவர்‌ என மொத்தம்‌ 5824 வாக்காளர்கள்‌ நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. தற்போது கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 14.02.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர்‌ பட்டியலில்‌ 29,91,923 வாக்காளர்கள்‌ உள்ளனர்‌.

இனிவரும்‌ காலங்களில்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர்‌ திருத்தப்பணிகள்‌ அனைத்து வாக்காளர்‌ பதிவு அலுவலர்‌ மற்றும்‌ உதவி வாக்காளர்‌ பதிவு அலுவலர்‌ அலுவலகங்களிலும்‌ நடைபெறும்‌. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌ மற்றும்‌ திருத்தம்‌ செய்வது தொடர்பாக இணையதளம்‌ மூலமாக மனுக்களை பதிவு செய்யவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.nvsp.in எனும்‌ இணைய முகவரியின்‌ வாயிலாகவோ அல்லது Voters’ Helpline App எனும்‌ ஆண்ட்ராய்ட்‌ செயலி மூலமாகவோ பொதுமக்கள்‌ தங்கள்‌ விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்யலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...