திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! ஆண்களை விட 17,592 பெண் வாக்காளர்கள் அதிகம் - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு முகாம்களில் வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்த பணிகள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 2484 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 11,41,756 பேரும் பெண் வாக்காளர்கள் 11,59,448 பேர், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 277 பேர் என மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,01,481 பேர் இருப்பதாக தெரிவித்தார்.



அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 17,692 பேர் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையை விட அதிகம். இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் 54,178 பேர் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது எனவும் 2347 பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் 3553 பேர் முகவரி மாற்றம் செய்துள்ளனர் என்றும் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...