தமிழக-கேரள எல்லையில் தொடரும் கார் கடத்தல்; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

கோவை: கோவையிலிருந்து மோட்டார் உதிரி பாகங்களை கேரளாவிற்கு கார் மூலம் கொண்டு சென்றபோது தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தி காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: கோவையிலிருந்து மோட்டார் உதிரி பாகங்களை கேரளாவிற்கு கார் மூலம் கொண்டு சென்றபோது தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தி காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையிலிருந்து கேரளாவிற்கு பாலக்காடு சாலை வழியாக பல்வேறு பண்ட மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவையிலிருந்து மோட்டார் உதிரிப் பாகங்கள், தங்க நகைகள், என பல விலைமதிப்பு உள்ள பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் மர்ம கும்பல்கள் பாலக்காடு சாலை, தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதிகளை பயன்படுத்தி காரை வழிமறித்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி கல்யாண் ஜூவல்லரியின் 350 சவரன் தங்க நகைகள் அதிரடியாக வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே மர்ம கும்பல்களால் பல்வேறு வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இன்று மீண்டும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் உதிரிபாகங்கள் காருடன் மர்ம கும்பலால் அதிரடியாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (45). இவர் மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் உதிரி பாகங்களை தனது காரில் எடுத்துக்கொண்டு கேரளாவை நோக்கி சென்றுள்ளார். அப்போது, தமிழக கேரளா எல்லையான வாளையார் அருகே வந்த போது, 2 கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த சந்திரன் மற்றும் ஓட்டுநர் லோகநாதனை தாக்கி விட்டு காருடன் மோட்டார் உதிரி பாகங்களை திருடி சென்றனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், டி.எஸ்.பி. வேல்முருகன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக க.க சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...