கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த பணியாளர்களான தனியார் காவலர்களும், தூய்மை பணியாளர்களும் ஊதிய பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ளது மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பத்மாவதி நிறுவனத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களாகவும், மருத்துவமனை பாதுகாவலர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் பத்மாவதி நிறுவனத்தினர் ஒப்பந்த பணியாளர்களின் சம்பளங்களை அடிக்கடி பிடித்தம் செய்து கொள்வதாக புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென பத்மாவதி ஒப்பந்த பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் பணிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படிப்பறிவில்லாத பணியாளர்களின் சம்பளங்களை பிடித்து ஏமாற்றி வருவதாகவும் பத்மாவதி நிர்வாகத்தினர் மீது தொழிலாளர் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறும்போது ;-
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களின் சம்பளங்கள் மாதம்தோறும் பிடிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பணப்பிடிப்பு சம்பந்தமாக ஊழியர்கள் கூட்டாகச் சென்று கேட்டால் வேலையை விட்டு தூக்கி விடுவதாக நிர்வாகத் தரப்பில் மிரட்டுகின்றனர்.

அதேபோல வயது முதிர்ந்தவர்கள் என்று கூட பார்க்காமல் மேலாளர்கள் ஒருமையில் பேசுகின்றனர். விடுமுறை என்பதே கிடையாது. இப்படி பல்வேறு நெருக்கடியினால் தொழிலாளர்கள் மன கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.
அதேபோல சரி வேற சம்பளங்கள் தராததால் ஒரு தொழிலாளியின் குழந்தைக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியாத நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் பணம் திரட்டி கொடுத்தோம். ஆகவே எங்களின் பல்வேறு சிக்கல்களை அரசு கவனம் கொண்டு தீர்க்க வேண்டும் என்பதற்காக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.