கோவை: வால்பாறையில் பனியின் காரணமாக தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில், கொசுவினால் தேயிலை செடிகள் பாதிப்படைவது தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலை தோட்டங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களோடு வடமாநில தொழிலாளர்களும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பனியின் காரணமாக பல இடங்களில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. வால்பாறையிலுள்ள பல தேயிலை தோட்டங்களில் மர்ம கொசு தேயிலைச்செடிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேயிலை செடிகளின் இலைகள் சுருங்குவதுடன் செடிகளும் அழிந்து வருகின்றன. தேயிலை செடியின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளதால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொசுவினால் தேயிலை செடிகள் பாதிப்படைவது தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதன் காரணமாக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. கொசுவினால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை செடிகள் அருகில் கலர் சேலைகளை கட்டி கொசுவை ஈர்த்து அழிக்கும் முயற்சி பரீட்சார்த்தமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட செடிகள் சிவப்பு கொடி மூலம் குறிப்பிடப்பட்டு கொசுவை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.