திமுக என்ற 4 டயர் இல்லாத காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவாகி இருக்கிறார் - பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

கோவை: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நுணுக்கங்கள் தெரிந்த டிரைவர் எனவும் தற்போது அவர் ஓட்டுவது 50 ஆண்டு பழைமையான கார் என்றும் 4 டயர் இல்லாத திமுக என்ற காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவாகி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நுணுக்கங்கள் தெரிந்த டிரைவர் எனவும் தற்போது அவர் ஓட்டுவது 50 ஆண்டு பழைமையான கார் என்றும் 4 டயர் இல்லாத திமுக என்ற காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவாகி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் 1998ல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட 21 ஆண்டுகள் கழித்து காவல் துறையை சேர்ந்த வில்சன் குமரியில் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் இது போன்ற விவகாரங்களில் காவல்துறை கவனம் செலுத்தினாலும், இந்த சம்பவங்களை காவல் துறையால் கட்டுப்படுத்த இயலவில்லை எனவும் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த தேர்தலை விட பா.ஜ.க அதிகப்படியான வாக்குகள் மற்றும் 5 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், சி.ஏ.ஏவிற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது எனவும் தேர்தல் முடிவு வந்தவுடன் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது எனவும் இதே போன்ற போராட்டத்தை தமிழகத்தில் நடத்த முயற்சிக்கின்றனர் என்றார்.

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திறமைசாலி எனவும், நுணுக்கங்கள் தெரிந்த டிரைவர் என கூறிய அவர், தற்போது அவர் ஓட்டும் கார் ரேஸ்க்கு தகுந்த கார் அல்ல, 50 ஆண்டு பழைமையான கார் எனவும், 4 டயர் இல்லாத திமுக என்ற காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவாகி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். கலைஞரின் திறமைகள், துரைமுருகன் போன்றவர்களின் தேர்தல் அணுகுமுறைகளை இப்போது திமுக பயன்படுத்தவில்லை எனவும், அங்கிருப்பவர்கள் பயனற்றவர்களாக இருப்பது திமுகவிற்கு ஏற்பட்ட சரிவு என்று கூறினார்.

ரஜினியுடன் கூட்டணி என்ற தமிழருவி மணியனின் கருத்திற்கு ராமதாஸ் மறுப்பை சொன்னதாக இதுவரை தான் பார்க்கவில்லை எனவும் நடப்பது எதுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு நன்மையாக அமையட்டும் என்றவர், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை என்பது வழக்கமான நடைமுறை எனவும், எங்களுக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த பகையும் இல்லை எனவும் யார் போவதாக இருந்தாலும் நெய்வேலி சுரங்க ஆலையில் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் அப்படிப்பட்ட இடத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

நெய்வேலி சுரங்க நிர்வாகம் சினிமா படப்பிடிப்பிற்கு மத்திய அமைச்சரை கேட்டு அனுமதி கொடுக்கவில்லை, தன்னிச்சையான அமைப்பு என்பதால் அந்த நிர்வாகமே அனுமதி கொடுத்துள்ளது என்றும் விஜய் ரசிகர்களின் எதிர்ப்பு பா.ஜ.கவிற்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, நடிகர் விஜய்யை நான் நேசிக்கின்றேன் என்றவர், எப்படி பொன்.ராதாகிருஷ்ணனை பொன்.ராதாகிருஷ்ணனால் எதிர்க்க முடியும் என்றார். மேலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது எனவும் ஏற்கனவே இருக்கும் திட்டங்களை நடைமுறைபடுத்துவதை மக்கள்தான் யோசிக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டவை என்றும் புதிய திட்டங்கள் வருவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

மேலும், ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, இன்று திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் வீடு போன்றவை தாக்கப்பட்டு இருக்கின்றன என கூறிய அவர், பயங்கரவாதிகளுக்கு குளிர்விட ஆரம்பித்து விட்டது என்பதை இது காட்டுகின்றது எனவும், தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வில்சன் கொலை என்பது தமிழக காவல் துறைக்கு விடுக்கப்பட்ட சவால் எனவும் தெரிவித்தார். டி.என்.பி.எஸ்.சி விவகாரம் குறித்த கேள்விக்கு , திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் இதில் அமைதிகாக்கின்றார் என அவரிடம் கேளுங்கள் என பதில் அளித்தார். இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் உடனிருந்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...