கோவையில் காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்த முயன்ற பாரத் சேனா அமைப்பினர்!

கோவை: காதலர் தினத்திற்கு எதிராக பாரத் சேனா அமைப்பின் சார்பாக பாப்பநாயக்கன்பாளையம் சிக்னல் அருகே ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் அல்சேஷன் நாய்க்கும் தாலி காட்டி திருமணம் நடத்த முயற்சி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை: காதலர் தினத்திற்கு எதிராக பாரத் சேனா அமைப்பின் சார்பாக பாப்பநாயக்கன்பாளையம் சிக்னல் அருகே ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் அல்சேஷன் நாய்க்கும் தாலி காட்டி திருமணம் நடத்த முயற்சி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகம் முழுவதிலும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இந்த வருட காதலர் தினத்திற்கு எதிராக பாரத் சேனா அமைப்பின் சார்பாக பாப்பநாயக்கன்பாளையம் சிக்னல் அருகே ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் தாலி காட்டி திருமணம் நடத்த முயற்சி செய்தனர்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பாரத் சேனாவின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ருத்ரமுத்து பேசுகையில், காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும், பொது இடங்களில் அநாகரீகமாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும், நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

கடைசி வரைக்கும் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் தாலியை கையிலேயே பிடித்து நகைச்சுவை செய்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...