கோவையில் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுடன்‌ தலைமை தேர்தல்‌ அலுவலர்‌ ஆய்வு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுடன்‌ இன்று(பிப்ரவரி 12) தமிழக தலைமை தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலர்‌ சத்ய பிரதா சாஹூ,‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி முன்னிலையில்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுடன்‌ இன்று(பிப்ரவரி 12) தமிழக தலைமை தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலர்‌ சத்ய பிரதா சாஹூ,‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி முன்னிலையில்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.



இந்த ஆய்வு கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராம துரைமுருகன்‌, மாநகராட்சி துணை ஆணையர்‌ பிரசன்னா இராமசாமி, பொள்ளாச்சி சார்‌ ஆட்சியர்‌ வைத்தியநாதன்‌ இ.ஆ.ப., வருவாய்‌ கோட்டாட்சியர்‌ சுரேஷ்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (தேர்தல்‌) முத்துராமலிங்கம்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இக்கூட்டத்தில்‌ தமிழக தலைமைத் தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌;-

இந்திய மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில்‌ வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின்‌ கடமையாகும்‌. அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும்‌ வாக்களிக்க வேண்டும்‌ என்ற கருத்தினை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது வாக்காளர்‌ பெயர்‌ சேர்த்தல்‌, முகவரி மாற்றம்‌ மற்றும்‌ திருத்தம்‌ பணிகள்‌ இந்திய தேர்தல்‌ ஆணையத்தால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்‌, இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில்‌ 01.01.2020-ம்‌ தேதியை தகுதி நாளாகக்‌ கொண்டு, பதினெட்டு வயது நிறைவடைந்தவர்‌ (31.12.2001 அன்றோ அல்லது முன்னதாகவோ பிறந்தவர்‌) வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்ப்பதற்கு, படிவம்‌ 6-இன்‌ மூலமாகவும்‌, பதிவினை நீக்கம்‌ செய்ய படிவம்‌ 7-ன் மூலமாகவும்‌, ஏற்கெனவே உள்ள பதிவில்‌ திருத்தம்‌ செய்ய படிவம்‌ 8-இன்‌ மூலமாகவும்‌, ஒரே சட்டமன்றத்‌ தொகுதிக்குட்பட்ட பகுதியில்‌ குடி பெயர்ந்தவர்கள்‌ படிவம்‌ 8ஏ-இன்‌ மூலமாகவும்‌ விண்ணப்பம்‌ செய்யலாம்‌. ஒரு சட்டமன்றத்‌ தொகுதிக்குண்டான பகுதியிலிருந்து வேறொரு சட்டமன்றத்‌ தொகுதிக்குண்டான பகுதிக்கு குடிபெயர்ந்து சென்றவர்கள்‌ புதிய பகுதியில்‌ பெயர்‌ சேர்க்கவும்‌ படிவம்‌ 6-ஐ பயன்படுத்தி வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தம்‌ செய்யும்‌ பணி 23.12.2019 முதல்‌ 14.02.2020 வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கல்‌ மற்றும்‌ திருத்தம்‌ மேற்கொள்ள படிவங்கள்‌ வாக்குப்பதிவு மையங்கள்‌, கோட்டாட்சியர்‌ அலுவலகங்கள்‌, வட்டாட்சியர்‌ அலுவலகங்கள்‌, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்‌ மற்றும்‌ நகராட்சி அலுவலகங்களில்‌ படிவங்கள்‌ பெறப்பட்டது. மேலும்‌, 04.01.2020, 05.01.2020, 11.01.2020 மற்றும்‌ 12.01.2020 ஆகிய தேதிகளில்‌ வாக்குப்பதிவு மையங்களில்‌ சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டும்‌. இணையதளம்‌ மூலமாகவும்‌ மொத்தம்‌ 1,08,596 படிவங்கள்‌ பெறப்பட்டது.

இப்படிவங்களின்‌ மீதும்‌ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கொண்டு விசாரணை செய்யப்பட்டு, அதன்‌ பின்னர்‌ வாக்குச்‌ சாவடி நிலை அலுவலர்‌ மேற்பார்வையாளர்‌, உதவி வாக்காளர்‌ பதிவு அலுவலர்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பதிவு அலுவலர்‌ மூலம்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பணிகள்‌ முடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலர்‌ சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்‌.

இதனைத்‌ தொடர்ந்து, பார்வையற்றோர்‌ படித்து அறிந்து கொள்ளும்‌ விதமான வாக்காளர்‌ அடையாள அட்டையை பார்வையற்ற வாக்காளருக்கு தமிழக தலைமை தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலர்‌ சத்ய பிரதா சாஹூ வழங்கினார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...