கோவை ஈஷாவில்‌ பிப்ரவரி 21-ம்‌ தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்‌..!

கோவை: கோவையில்‌ உள்ள ஈஷாவில்‌ மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 21-ம்‌ தேதி மிக பிரமாண்டமாகவும்‌ விமர்சையாகயும்‌ கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு வரும்‌ பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும்‌, சர்ப்ப சூத்திரமும்‌ பிரசாதமாக வழங்கப்படும்‌.

கோவை: கோவையில்‌ உள்ள ஈஷாவில்‌ மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 21-ம்‌ தேதி மிக பிரமாண்டமாகவும்‌ விமர்சையாகயும்‌ கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு வரும்‌ பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும்‌, சர்ப்ப சூத்திரமும்‌ பிரசாதமாக வழங்கப்படும்‌.

“சிவனின்‌ அருள்‌ நிறைந்த இரவு” என்று வழங்கப்படும்‌ மஹாசிவராத்திரி இரவு, நம்‌ இந்திய ஆன்மீகக்‌ கலாச்சாரத்தில்‌ மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, கோவையில்‌ உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும்‌ விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்‌, ஈஷாவின்‌ 26-ம்‌ ஆண்டு மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 21-ம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ பிப்ரவரி 22-ம்‌ தேதி காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

தன்னை உணர்ந்த ஞானியும்‌ யோகியுமான சத்குரு முன்னிலையில்‌ நடக்கும்‌ இவ்விழாவில்‌ தமிழகம்‌ மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து லட்சக்கணக்கான மக்கள்‌ நேரில்‌ பங்கேற்க உள்ளனர்‌. தியான லிங்கத்தில்‌ நிகழ்த்தப்படும்‌ பஞ்சபூத ஆராதனாவுடன்‌ விழா தொடங்கும்‌. லிங்க பைரவி தேவியின்‌ மஹா யாத்திரை, உள்நிலையில்‌ பரவசத்தில்‌ ஆழ்த்தும்‌ சக்திவாய்ந்த தியானங்கள்‌, சத்குருவின்‌ சத்சங்கம்‌, கண்ணை கவரும்‌ ஆதியோகி இவய தரிசன காட்௪, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும்‌ புகழ்பெற்ற கலைஞர்களின்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகளுடன்‌ விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும்‌ பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள்‌ மற்றும்‌ சர்ப்ப சூத்திரம்‌ பிரசாதமாக வழங்கப்படும்‌. விழாவில்‌ பங்கேற்கும்‌ லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும்‌ வழங்கப்பட உள்ளது. மஹாசிவராத்திரி விழாவில்‌ கலந்து கொள்வதற்காக தமிழகம்‌ முழுவதும்‌ அந்தந்த மாவட்டங்களில்‌ தன்னார்வ தொண்டர்கள்‌ மூலம்‌ பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்‌, விழா நாட்களில்‌ கோவையில்‌ இருந்து ஈஷா யோகா மையத்துக்கு இறப்பு பேருந்து வசதிகளும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமத இலவசம்‌. அனைவரும்‌ வருக.

கூடுதல்‌ தகவல்களுக்கு:tamil.sadhguru.org/MSR, 83000 83111

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...