கோவை: 100 அடி சாலை - ஆவாரம்பாளையம் சாலையை இணைக்கும் மேம்பாலத்தை வாகன ஓட்டிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நடைபயிற்சி மற்றும் ஜாகிங்கிற்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கோவை நகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) ஆர்.முத்தரசு தெரிவித்துள்ளார்.

கோவை நகரில் மேம்பாலங்களில் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி, ஜாக்கிங் செல்வோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிலர் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே செல்கின்றனர். பின்னால் வரும் வாகனங்களை நடைபயிற்சி செய்பவர்கள் கவனிப்பதில்லை.
இந்த நிலையில், ஜாகிங் மற்றும் நடைபயிற்சிக்கு மேம்பாலத்தை பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செல்ஃபி எடுக்க தங்கள் வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்துபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என கோவை நகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) ஆர்.முத்தரசு எச்சரித்துள்ளார்.
மேலும், பீளமேடு டைட்டில் பார்க் சாலையில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறி இவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் இது தொடர்பாக அந்த பகுதி சாலையில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவை நகர காவல்துறை துணை ஆணையர் கூறியுள்ளார்.