திருப்பூரில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாநகர போலீசார் அறிவுறுத்தல்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிவேகமக செல்லக் கூடாது என்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மாநகர போலீசார் அறிவுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிவேகமக செல்லக் கூடாது என்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மாநகர போலீசார் அறிவுறுத்தினர்.

திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுடனான கலந்தாய்வு கூட்டமானது மாநகர துணை ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் உட்பட ஆட்டோ, ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.



அப்போது கூட்டத்தில் பேசிய பத்ரிநாராயணன், மாநகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அதிவேகமாகச் செல்லக் கூடாது எனவும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டுமென்றும், ஆட்டோ ஓட்டுநர்கள் செல்லும் வழியில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் அது குறித்து பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.



மேலும், உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தவும், கண்டறியும் நடவடிக்கையாக விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலகமும், திருப்பூர் மாநகர காவல் துறை சார்பிலும் உரிமம் பெற்ற ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திருப்பூர் மாநகர பகுதிகளில் 20 சிக்னல்கள் உள்ள நிலையில், ஒரு சில முக்கிய இடங்களை தேர்ந்தெடுத்து 14 சிக்னல்கள் அதிகரிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...