பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு; கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்ற மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்ற மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் சி.பி.ஐ,. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்,வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் போலீசார் இன்று சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வரும் 25ம் தேதி வரை 5 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், இந்த பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் நீதிபதி சக்திவேல் உத்தரவு பிறப்பித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...