NPR , NRC போன்ற மக்கள் விரோத சட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த அனுமதிக்க கூடாது - ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் திருப்பூரில் பேட்டி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 



இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் தக்ஷின் கன்னடா மாவட்ட ஆட்சியராக இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த முன்னால் ஆட்சியர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டார். 



செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் NPR , NRC ஆகியவை மிகவும் மோசமான மக்கள் விரோத சட்டங்கள் எனவும், அவை பாசிசத்தின் கிரீடங்கள் என சாடினார். 

அவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...