கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர்.

வன வாசிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக கூறியும், குடியிருக்க வீடுகள், விவசாய நிலத்திற்கு 2006 வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்க வேண்டும்,உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து கோவை நோக்கி நடை பயணத்தை துவக்கிய அவர்களை வால்பாறை டி.எஸ்பி விவேகானந்தன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் வராததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் பழங்குடியின மக்கள் கோவை நோக்கி நடைபயணத்தை துவக்கினர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மன்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வால்பாறை வணிகர் சங்கத்தினர் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரவித்தனர். பழங்குடியினர் கைதை கண்டித்து வால்பாறையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.