கோவை: 1987 ஆம் ஆண்டு முதல் செய்யல்பட்டு வரும் பெத்தேல் லிவிசி நினைவு மானய்த் துவக்கப் பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரி சுகுணாபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

சுகுணாபுரம் கிழக்கு குனியமுத்தூர் பகுதியில் 1987 ம் ஆண்டு முதல் அரசுடன் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கும் பெத்தேல் லிவிசி நினைவு மானய்த் துவக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி பேரூர் கல்வி மாவட்டத்திற்கு கீழ் வருகிறது.

தற்போது இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு இந்த பள்ளியை ஏற்று நடத்தாமல் மூடுவதற்கு திட்டமிட்டுள்ளது என குற்றம் சாட்டுகின்றனர்.
"அரசின் இந்த முடிவால், சுகுணாபுரம் கிழக்கு பகுதி மக்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், இந்த ஆரம்பப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.