கோவை: பாசனத்திற்காக தண்ணீர் முறையாக திறக்கப்படவில்லை என்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவார்கள், என பி.ஏ.பி பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று, பிப் 10 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து மனுதாரர்கள் கூறும் போது:

பரம்பிக்குளம் அழியார் பாசன திட்டம் புதிய ஆயக்கட்டு வழியாக விவசாய நிலங்கள் பாசன வசதிக்காக 70 வது நாட்கள் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் மார்ச் 18 வரை இந்த தண்ணீர் சுழற்சி முறையில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை 35 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பாசனத்தை நம்பி 11 ஆயிரத்து 181 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் தென்னை, வாழை, மக்காசோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. தண்ணீர் முறையாக திறக்கப்படவில்லை என்றால் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவார்கள்.
எனவே, மாவட்ட கலெக்டர் தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.