கோவையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாடு: தமிழகம் முழுவதும் மே 21-ஆம் தேதி மனுநூல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என தீர்மானம்

கோவை: கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நேற்று, பிப் 9 ஆம் தேதி நடைபெற்றது.


கோவை: கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நேற்று, பிப் 9 ஆம் தேதி நடைபெற்றது.

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நீலச்சட்டை பேரணியானது கோவை அவிநாசி சாலையில் உள்ள பாலசுந்தரம் சாலையில் தொடங்கி சாலையின் முடிவான பெண்கள் பாலிடெக்னிக் அருகே நிறைவுற்றது. இந்தப் பேரணியில் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இதைத்தொடர்ந்து பறை இசை முழங்க மாநாடு தொடங்கியது. பின்னர், மாநாட்டை தலைமையேற்று துவங்கி வைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேசும் போது, "சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வர வேண்டுமானால், மத்திய அரசு அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும், எனவும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து மதம் இருக்கும் வரை சாதியம் ஒழியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் மாநாட்டின் சார்பில் "பார்ப்பனியம்... சாதியம்...வேரறு" என்ற புத்தகத்தை மூத்த பெரியாரிய பொதுவுடமைவாதி ஆனைமுத்து வெளியிட திராவிடர் தமிழர் கட்சித்தலைவர் வெண்மணியும்,

தமிழர் விடியல் கட்சியின் பொறுப்பாளர் டைசனும் பெற்று கொண்டனர்.

இதையடுத்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறும்போது:







டிஜிட்டல் இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் வளர்ச்சிகள் இருக்கும் காலத்தில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்வதற்கு வன்மம் தான் காரணம் எனவும் மாவட்டத்திற்கு என மாதம் இரண்டு உயிர்கள் இதனால் பலியாகிறது எனவும் தெரிவித்தார். அதேபோல மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மனிதத்தை படுகொலை செய்பவர்களிடம் விழிப்புணர்வாக இருக்க சக மனிதர்களுக்கு புரிதல் உருவாக்குவோம் என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா:

இஸ்லாமியர்களுக்கும் நீல சட்டைக்கும் ஆன தொடர்பு இன்று ஏற்பட்டது அல்ல, அம்பேத்காரின் சாதி எதிர்ப்பு போராட்டத்துடன் தொடர்பு கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்டமாக மனு ஸ்மிருதி இருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் எழுதியுள்ளது என தெரிவித்ததுடன் சாதியத்தை ஒழித்து மதச்சார்பற்ற ஜனநாயகத்தை உருவாக்க சேர்ந்து உழைப்போம் எனவும் தெரிவித்தார். 

இதன்பின்னர் பேசிய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன்:

தமிழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தும், இந்தியாவை மோடியிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டும் எனவும், நாட்டை பாதுகாக்க சாதி, மதம் கடந்து ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும் சாதியை ஒழிக்க பார்ப்பனியம் என்ற கருத்தை ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி:

சாதி ஒழிப்பு மாநாடு நடத்த நீலச்சட்டை பேரணி நடத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பிற்கும் இஸ்லாமியர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது ஆனால் காவிகள் சவ ஊர்வலம் நடத்தி கடைகளை அடித்து நொறுக்க அனுமதி வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்த சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல மற்றவர்களுக்கும் சேர்த்து தான் இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். மேலும் இந்த மண்ணில் அம்பேத்கர் சிலையை நிறுவ அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாநாட்டின் தலைவர் ராமகிருஷ்ணன் மாநாட்டின் தீர்மானங்களில் முக்கிய தீர்மானமான போராட்ட அறிவிப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

மேலும் இந்தத் தீர்மானத்தின் படி மே 21ம் தேதி தமிழகமெங்கும் மனுநூலை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் இரண்டு இளம் ஜோடிகளுக்கு மேடையில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்தார்.



இதையடுத்து பேசிய கி வீரமணி சாதி ஒழிந்தால் தீண்டாமை ஒழியும் எனவும் மனு தர்மம் தான் நாட்டை ஆள்கிறது எனவும் தெரிவித்தார். அதேபோல, இராணுவம் ஆர்எஸ்எஸ் மயமாகி வருகிறது எனவும் மீண்டும் மனுதர்மம் எதிர்ப்பு போராட்டம் என்பது சாதி ஒழிப்பு போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் போராட்டங்களாக ஒன்றிணைவோம் என்றார்.

பின்னர் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெளகலான் பாகவி: 

இஸ்லாமியர்கள் சாதி ஒழிப்பின் அடையாளங்கள் எனவும், இந்து மத இழிவுகளில் இருந்து விடுபட, இஸ்லாம் மதத்தை நாங்கள் தழுவினோம் என்றார். மேலும் தலித், இஸ்லாமியர், தமிழ் இனத்திற்கான பொது எதிரி ஆர்.எஸ்.எஸ் எனவும் ,ஒன்றிணைந்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும் எனவும் தெரிவித்த அவர் சிஏஏக்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம்களுக்கான போராட்டம் என சுருக்க முயற்சி நடக்கிறது எனவும், இது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் முயற்சி எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு: 

நீலம் மனிதனை மனிதனாக்குகிறது. கருப்பு மாண்புமிகு மனிதனாக்குகிறது. மேலும் ஜனநாயகம், சுதந்திரம், தனி மனித உரிமையை பாதுகாக்கும் மகத்தான நிறங்கள் நீலமும், கருப்பும் எனவும், காவி நிறம் வலிமை பெற்று வரும் நிலையில், அதனை தடுக்க நீலமும், கருப்பும் தான் களத்தில் போராடி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்:







கருஞ்சட்டை, நீலச்சட்டை பேரணியை அடுத்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு செஞ்சட்டை பேரணி நடத்தும்.அம்பேத்கர் பயன்படுத்தியதால் தான் பலர் நீலத்தை பயன்படுத்துவதில்லை எனவும், சங்பரிவார்கள் நீலத்தை ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும் நீலம் என்பது வண்ண அடையாளம் அல்ல. கொள்கை அடையாளம் என்றார்.

நாடக காதல் என சொல்பவர்களும், கூலிப்படை வைத்து கொல்பவர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ் கருத்திற்கு ஆதரவானவர்கள் எனவும், தமிழ் தேசியம் என பேசுபவர்கள் சாதி ஆணவ கொலைகளுக்கு ஆதரவாக உள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தர்மபுரியில் 3 கிராமங்களை எரித்தவர்கள், ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு எதிராக இருப்பது தான் நாடக அரசியல் எனவும், சாதி கலவரத்தை தூண்ட தன் மீது அவதூறு பரப்பினார்கள் எனவும் அவர் கூறினார். நீலம், சிவப்பு, கருப்பு மூன்றும் இணைந்தாக வேண்டும் எனவும், தமிழ் மண், பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் எனவும் கூறிய அவர், சங் பரிவார்களை காலுன்ற விடாமல் இருக்க, ஒன்று சேர வேண்டும், சாதி ஒழிப்பே, மக்கள் விடுதலை என தெரிவித்தார்.

மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு இயக்கத்தினர் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...