மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து பசு மாட்டினை வேட்டையாடிய சிறுத்தையால் பரபரப்பு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து பசு மாட்டினை வேட்டையாடிய சிறுத்தையால் பரபரப்பு. வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை


கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து பசு மாட்டினை வேட்டையாடிய சிறுத்தையால் பரபரப்பு. வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அருகே உள்ளது சிட்டேபாளையம் கிராமம். கால்நடை வளர்ப்பு அதிகம் கொண்ட இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளதால் அடிக்கடி காட்டுயானைகளால் பயிர்சேதம் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த கிராமத்தில் சிறுத்தை ஓன்று நுழைந்து பசுமாட்டினை வேட்டையாடி இழுத்து சென்ற சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்டேப்பாளையத்தில் உள்ள பெரிய தோட்டம் பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயி முருகன் என்பவர் வாழை விவசாயம் செய்து வருவதுடன் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வாழை தோட்டத்தினுள் பசு மாட்டினை கட்டி வைத்து விட்டு அருகில் உள்ள தனது வீடு திரும்பியுள்ளார்.

பின்னர், இரவு அங்கு மாடு அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது மாட்டினை சிறுத்தை ஒன்று அடித்து இழுத்து சென்றுள்ளது, இதனை கண்டு அதிர்ந்து போன விவசாயி முருகன் அருகில் இருந்த மற்ற விவசாயிகளை உதவிக்கு அழைத்து சிறுத்தையை விரட்டி பசுமாட்டினை மீட்க முயற்சி செய்துள்ளார். அதறகுள் சிறுத்தை பசுவினை கொன்று பாதியை உணவாக்கி விட்டு சென்றுவிட்டது

பின்னர், இது குறித்து சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பசுமாட்டின் உடல் மற்றும் சிறுத்தையின் கால் தடயங்களை ஆய்வு செய்தனர்

இது குறித்து பேசிய கிராம மக்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கே நுழைந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடியுள்ளதால் அச்சமடைந்துள்ளதாகவும் ஏற்கனவே நான்கு முறைக்கும் மேல் ஆடு, நாய்களை வேட்டையாடியுள்ளதால் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...