கோவை: கோவையில் நடைபெற்ற உலக மாணவர் தொழில்முனைவோர் விருதுக்கான இறுதிப்போட்டியில் புணேவை சேர்ந்த மாணவி அக்ரிதி குப்தா இந்திய அளவிலான சிறந்த மாணவர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

தொழில் முனைவோர் அமைப்பு 61 நாடுகளில் 191 கிளைகளைக் கொண்டுள்ள உலகளாவிய அமைப்பாகும். கோவை தொழில் முனைவோர் அமைப்பு இந்த அமைப்பின் தெற்காசிய பிராந்திய மாநாடு மாறுபட்ட துறைகளைச் சார்ந்த 80 பேர் இதில் உறுப்பினர்கள் இந்த அமைப்பின் சார்பில் சிறந்த தேசிய மாணவர் தொழில் முனைவோருக்கான இறுதிப்போட்டி கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் பல்வேறு பிராந்திய போட்டிகளில் வெற்றி பெற்ற 25 பேரில் தேசிய அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்று தங்கள் தொழில் உத்திகள் வடிவமைப்பு முன்வைத்தனர். இதில் புணேவை சேர்ந்த மாணவி அக்ரிதி குப்தா இந்திய அளவிலான சிறந்த மாணவர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றிபெற்ற மாணவி தென்னாப்பிரிக்க நாட்டில் கேப்டவுன் நகரில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மாணவர் தொழில்முனைவோர் போட்டியில் பங்கேற்க உள்ளார்,
முன்னதாக இந்தப் போட்டியில் கலந்து உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து தொழில் முனைவோராக உருவாக ஆர்வமும் துடிப்பும் உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுடன் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்கள் போட்டிக்கான தலைவர் சிவ பாலகிருஷ்ணன், தெற்காசிய உறுப்பினர்களான இயக்குனர் ஜெயேந்திர ஜெயச்சந்திரன், கோவை கிளையின் தலைவர் ரஜினிகாந்த் தெற்காசிய நிபுணர்களான பியூஷ் பண்டாரி மற்றும் பிரதிக் கோயல், தொழில்முனைவோர் கோவை அமைப்பின் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் பரிமாற்ற பிரிவின் தலைவர் சூரஜ் சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வுகளில் செயல்பட்டனர்.