கோவை: கோவை அவிநாசி சாலை அருகே உள்ள பாலசுந்தரம் சாலையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் பங்குபெறும் சாதி ஒழிப்பு நீலச்சட்டை பேரணி நடைபெற்றது.

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நீலச்சட்டை பேரணியானது கோவை பாலசுந்தரம் சாலையில் இருந்து தொடங்கியது. இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அம்பேத்கர் உருவ பதாகைகளை ஏந்தியும், நீலச்சட்டை அணிந்த படியும் ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும், சாதியத்தை ஒழிக்க வேண்டும் எனவும் இந்த ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் பாரம்பரிய கலைகளான சிலம்ப போட்டிகளை நடத்தினர்.

மேலும், இந்த பேரணியில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி, ஆதித்தமிழர் பேரவை அதியமான் , திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.