தொடர்ந்து கோரிக்கைகளை புறக்கணிப்பதாக கூறி வால்பாறை பழங்குடி மக்கள் கோவை ஆட்சியரை சந்திக்க 120 கிலோ மீட்டர் நடைபயணம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் 16 செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் 16 செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர். 

வால்பாறை பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புதிய புதிய சட்டங்கள் மற்றும் புதிய அதிகாரகளின் கெடுபிடிகள் காரணமாக மலைவாழ் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்திருப்பதுடன் மேலும் அவர்களை வெளியேற்றும் முகமாக தொடர்ந்து வன வாசிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக கூறியும், குடியிருக்க வீடுகள், விவசாய நிலத்திற்கு வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்க வேண்டும், கல்லார் எஸ்டேட் பகுதியில் உள்ள காடர் இன மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் பழங்குடியின கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற வலியுறுத்தி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

அம்மனுக்களுக்கு, எவ்வித பயனும் இல்லாத நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையிலிருந்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு 120 கிலோ மீட்டர் நடைபயணத்தை நடத்தப்போவதாக பழங்குடியின மக்கள் அறிவித்திருந்தனர். 

மேலும், இது குறித்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. 



இதில் நிர்வாகம் சார்பில் 15 தினங்கள் அவகாசத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பழங்குடியினர் பல வருடங்களாக கோரிக்கை வைத்து ஏமாந்து வருகிறோம், ஆகவே திட்டமிட்டபடி நாளை 10ம் தேதி நடைபயண போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். 

இப்பயணத்தில் 600க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பேச்சுவார்த்தையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் வெங்கடாசலம், காவல் ஆய்வாளர் பாலமுருகன், வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார், மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன், மற்றும் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின் மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...