அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலில் சிக்கிய குச்சியை எடுக்கவே உதவிக்கு சிறுவனை அழைத்தார்; ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கோவை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர் எனவும் காலில் சிக்கிய குச்சியை எடுக்கவே உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார் என்றும் இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


கோவை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர் எனவும் காலில் சிக்கிய குச்சியை எடுக்கவே உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார் என்றும் இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது என்றார். 

டி.என்.பி.எஸ்.சி விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்த அரசு விரும்புவதாக கூறிய அவர், என்ன தவறு என்று காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தவறில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர் எனவும் காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிப்பதாக கூறினார். 

வறட்சி என்ற சொல்லே இந்த ஆண்டு இல்லை என்றும் நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்பி இருக்கின்றது என்றவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது என தெரியவில்லை எனவும் அவர் ஒரு பக்தி மான், அவர் சொந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும் அது அதிமுகவின் கருத்து கிடையாது என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருப்பதாக தெரிவித்தார். 

மேலும், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவ‌ர், பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும் எனவும் மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு என்றார். 

மேலும், இடைநிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை எனவும் இடைநிற்றலை தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முதலமை‌ச்ச‌ர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...