லிங்கபைரவியில்‌ தைப்பூசத்‌ திருவிழா கோலாகலம்‌..! நூற்றுக்கணக்கான பெண்கள்‌ முளைப்பாரி ஊர்வலம்‌!

கோவை: கோவை லிங்கபைரவியில்‌ இன்று மிக கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசத்‌ திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள்‌ தேவியை தரிசனம்‌ செய்து அவளின்‌ அருள்‌ பெற்றனர்‌.

கோவை: கோவை லிங்கபைரவியில்‌ இன்று மிக கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசத்‌ திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள்‌ தேவியை தரிசனம்‌ செய்து அவளின்‌ அருள்‌ பெற்றனர்‌.



பெண்‌ தன்மையின்‌ தெய்வீக அம்சமான லிங்கபைரவியில்‌ நவராத்திரி மற்றும்‌ தைப்பூசத்‌ திருவிழா ஆண்டுதோறும்‌ வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு தைப்பூசத்‌ திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 



இதில் நூற்றுக்கணக்கான பெண்கள்‌ கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரி சுமந்து வந்தனர்‌. அதனுடன்‌, முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின்‌ உருவம்‌ வடிவமைக்கப்பட்டு, தேரில்‌ வைத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்‌. காலை 6 மணிக்கு கள்ளிப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம்‌ நண்பகல்‌ 12 மணியளவில்‌ லிங்கபைரவியை வந்தடைந்தது.



வரும்‌ வழியில்‌ ஆலந்துறை, மத்வராயபாம்‌, இருட்டுப்பள்ளம்‌, காந்தி காலனி, செம்மேடு, முட்டத்துவயல்‌ உள்ளிட்ட பல்வேறு இடங்களில்‌ அங்குள்ள கிராம மக்கள்‌ ஊர்வலத்கை வரவேற்று தேவியின்‌ அருளை பெற்றனர்‌.



தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள்‌ கடந்த 21 நாட்கள்‌ சிவாங்கா விரதம்‌ மேற்கொண்டனர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய்‌, தானியங்கள்‌, எள்‌ உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்‌.

நூற்றுக்கணக்கானோர்‌ மா விளக்கு ஏற்றியும் அர்ப்பணிப்பு செலுத்தினர்‌. மாலை 5.40 மணி முதல்‌ 6.40 மணி வரை லிங்கபைரவியில்‌ பெளர்ணமி பூஜையும்‌, 7 மணியளவில்‌, தேவியின்‌ உற்சவ மூர்த்தி 7 மணியளவில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நந்தி முன்பாக மஹா ஆரத்தியும்‌ நடந்தது. இரவு 8 மணியளவில்‌ ஆதியோகு தரிசனம்‌ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று லிங்கபைரவியின்‌ 10-ம்‌ ஆண்டு பிரதிஷ்டை இனம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...