நீலகிரி: காலணியை கழற்றச் சொன்னதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர் மீது பதியப்பட்ட புகாரை திரும்பப்பெற உள்ளதாக அமைச்சரால் காலணியை கழற்றுமாறு பணிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் யானைகள் மறுவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நேற்று (பிப்.6), தனது காலணிகளை பழங்குடிச் சிறுவனை அழைத்து கழற்றிவிடச் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தலைவர்களும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த படக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தான் தன்னுடைய பேரனை அழைத்து செருப்பை கழற்றச் சொல்வது போன்ற எண்ணத்தில்தான் கூறினேனே தவிர, எந்த விதமான உள்நோக்கமும் தனக்கு கிடையாது என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.
இதையடுத்து பழங்குடியினர் சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் நேற்று மாலை அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். புகார் பெற்றுக்கொள்ளப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், அமைச்சரின் செருப்பை கழற்றிய சிறுவன், அவரது தாய் மற்றும் பழங்குடியினர் 50-க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர், தங்களது வாகனத்தில் ஊட்டி விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு தன் மீது போலீசில் புகார் கொடுத்த சிறுவன், அவனது தாய், பழங்குடியினர் நிர்வாகிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தன் பேரனாக நினைத்தே சிறுவனை அவ்வாறு செய்ய சொன்னதாகவும், அதற்கு ஏற்கெனவே மன்னிப்பு தெரிவித்ததாகவும் கூறினார். தற்போது சிறுவனை நேரில் வரவழைத்து, சிறுவனிடமும் அவரது குடும்பத்தினரிடமும் வருத்தம் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாயார், அமைச்சர் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவருக்கு எதிரான புகார் மனுவை திரும்பப்பெற உள்ளதாக தெரிவித்தார்.