கோவையில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சி; ராஜஸ்தானில் தொழில் துவக்க கோவை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

கோவை: கோவையில் வெல்கம் ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் லிமிடெட் சார்பில் ராஜஸ்தானில் தொழில் துவக்க கோவை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கோவை: கோவையில் வெல்கம் ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் லிமிடெட் சார்பில் ராஜஸ்தானில் தொழில் துவக்க கோவை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், ராஜஸ்தான் மாநில அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் ஊக்கம் போன்றவை குறித்து கோவையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. ராஜஸ்தான் முதலீட்டு மேம்பாட்டு மேம்பாட்டு திட்டம் 2019 மூலம், எவ்வாறு உதவி செய்ய முடியும் என்ற தகவலும் அளிக்கப்பட்டது.



ரிகோ முதுநிலை துணை மேலாளர் எஸ். கே குப்தா, துணை பொது மேலாளர் தருண் கே ஜெயின் (நிதி), ஆகியோர், சூரிய ஒளி, காற்று போன்ற மரபுசாரா மின்சக்திகளுக்கான வாய்ப்புகள், நகை கற்கள், ஜவுளி, செராமிக் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கைவினை பொருட்கள் மற்றும் வாகனங்கள் போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கினர். மேலும், தண்ணீர், அடிப்படை கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து விளக்கினர்.

ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பின் கோவை பிரிவு தலைவர் ரமேஷ்பாப்னா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோவை மேலாண்மை சங்கம், ராஜஸ்தான் பவுண்டேஷன், பிக்கி எப்எல்ஓ, கோவை நல சங்கம், டை மற்றும் ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பு ஆகியவை இணைந்து சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ராஜஸ்தானில் முதலீடு செய்வதால், கோவை தொழில் முனைவோருக்கு புவி அமைப்பு ரீதியான பயன்கள், கோவைக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், லாபம், அதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் மறுமலர்ச்சி போன்றவைகளை பங்கேற்ற அனைவரும் பாராட்டினர். மத்திய அரசு தரும் ஊக்கம், இவ்வாறு மூலதனமாக்க முடியும்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...