கோவை: கோவை நொய்யல் ஆறு நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்காலில் சாயக்கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ உத்தரவிட்டுள்ளார்.

கோவை நஞ்சுண்டாபுரம் நொய்யலாற்றின் ராஜவாய்க்கால், கிளைவாய்க்கால் தடுப்பணைகள் பகுதியில் மீன்கள் செத்து மிதக்கின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியை ஆய்வு செய்த பின்னர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.

பின்னர், பொதுமக்களிடம் இது குறித்து கேட்டறிந்தவர், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும் மாசடைந்த நீரினை சுத்தப்படுத்தித் தரும்படி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையின் நீர்நிலைகளான, நொய்யல் ஆறு, ராஜவாய்க்கால், அதனுடனான வாய்க்கால்கள், சங்கனூர் ஓடை ஆகியவற்றை தூர்வார வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆனால், இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார். மேலும், மராமத்து பணிகளுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்வதாக முதல்வர் எடப்பாடி கூறுகின்றார். ஆனால், எந்த பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.