கோவை மாவட்ட அளவிலான “உலக திறன்‌” போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர்‌ வாழ்த்து!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ மாவட்ட அளவிலான உலக திறன்‌ போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்‌.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ மாவட்ட அளவிலான உலக திறன்‌ போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்‌.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலக உதவி இயக்குநர்‌ ஆர்‌.டி.ராஜேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்‌ துறை இணை இயக்குநர்‌ லதா, அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர்‌ டி.செல்வராஜன்‌ மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

”மரம்‌ வளர்த்து மழை பெறுவோம்‌: திறன்‌ வளர்த்து உலகை வெல்வோம்‌” என உலக திறன்‌ போட்டிகளில்‌ கலந்து கொண்டு நம்‌ இளைஞர்களின்‌ திறனை உலக அளவில்‌ வெளிச்சத்திற்கு கொண்டுவர, இந்திய அளவிலும்‌, தமிழக அளவிலும்‌ பெரும்‌ முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1950 முதல்‌ உலகத்‌ திறன்‌ போட்டிகள்‌ இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை உலக அளவில்‌ ஒலிம்பிக்‌ போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. உலகத்திறன்‌ போட்டிகள்‌ உயர்ந்த செயல்திறன்‌ மற்றும்‌ தொழில்சார்ந்த சிறப்பு ஆகியவற்றின்‌ அளவுகோலாக கருதப்படுகிறது.

கட்டுமானம்‌ மற்றும்‌ கட்டமைப்பு தொழில்நுட்பம்‌, தளவாடங்கள்‌ மற்றும்‌ போக்குவரத்து, உற்பத்தி மற்றும்‌ பொறியியல்‌ தொழில்நுட்பம்‌, தகவல்‌ தொடர்பு தொழில்நுட்பம்‌, கலைப்‌ படைப்புகள்‌ மற்றும்‌ அலங்காரம்‌, சமூக மற்றும்‌ தனிப்பட்ட சேவை ஆகிய துறைகளில்‌ சிறப்பான திறன்‌ படைத்தோரை தேர்வு செய்திடவும்‌, திறன்‌ மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்‌ திறன்‌ போட்டிகள்‌ நடத்தப்படுகிறது.

2021-ல்‌ சீனாவின்‌ ஷாங்காய்‌ நகரில்‌ நடைபெற உள்ள உலகத்‌ திறன்‌ போட்டிகளுக்கு முன்னோட்டமாக, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட நிர்வாகம்‌ ஆகியன இணைந்து ஜனவரி 23 முதல்‌ ஜனவரி 31 வரை பல்வேறு மையங்களில்‌ மாவட்ட அளவிலான திறனாளர்கள்‌ தேர்வு செய்யும்‌ மாவட்ட திறன்‌ போட்டிகள்‌ நடத்தப்பட்டது. இந்தப்‌ போட்டிகளில்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்கள்‌ அடுத்து மாநில அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளில்‌ பங்கேற்பார்கள்‌. அந்த போட்டிகளில்‌ வெல்லும்‌ வெற்றியாளர்கள்‌ தேசிய அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளிலும்‌ பின்னர்‌ உலகத்‌ திறன்‌ போட்டிகளிலும்‌ பங்கெடுப்பார்கள்‌.

கோவை மாவட்டத்தில்‌, 32 பிரிவுகளில்‌ நடைபெற்ற போட்டிகளில்‌ நூற்றுக்கும் மேற்பட்டோர்‌ பங்கேற்றனர்‌. இந்த 32 பிரிவுகளில்‌ முதல்‌ இரண்டு வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களையும்‌, இந்தப்‌ போட்டிகளை சிறப்பாக நடத்திக்‌ கொடுத்த நிறுவனங்களுக்கும்‌, கமிட்டி உறுப்பினர்களும்‌ நற்சான்றிதழ்களையும்‌ வழங்கி, வெற்றியாளர்கள்‌ அடுத்தடுத்த நடைபெறும்‌ போட்டிகளிலும்‌ வெற்றிகளை பெற்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி வாழ்த்தினார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...