எவ்வித பாகுபாடுன்றி, நிதி ஒதுக்கீடு அனைத்து உறுப்பினர்களுக்கும்‌ பிரித்து வழங்கப்படும்‌ - ஊராட்சி தலைவர்‌ சாந்திமதி

கோவை: மாவட்ட ஊராட்சிக்‌ குழுவின்‌ சாதாரண கூட்டம்‌ மாவட்ட ஊராட்சி தலைவர்‌ சாந்திமதி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஊராட்சி துணை தலைவர்‌ டி.கே. அமுல்கந்தசாமி, மாவட்ட ஊராட்சி செயலர்‌ சங்கமித்திரை மற்றும்‌ மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

கோவை: மாவட்ட ஊராட்சிக்‌ குழுவின்‌ சாதாரண கூட்டம்‌ மாவட்ட ஊராட்சி தலைவர்‌ சாந்திமதி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஊராட்சி துணை தலைவர்‌ டி.கே. அமுல்கந்தசாமி, மாவட்ட ஊராட்சி செயலர்‌ சங்கமித்திரை மற்றும்‌ மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டனர்‌.



கிராம ஊராட்சி என்பது மூன்றடுக்கு உள்ளட்சி அமைப்பில்‌ சிறந்த ஒன்றாக விளங்குவதுடன்‌, மக்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின்‌ தேவைகளைப்‌ பூர்த்தி செய்யும்‌ பொறுப்பில்‌ உள்ள அமைப்பாக விளங்குகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்‌, தெருவிளக்கு, சுகாதாரம்‌, சாலை வசதிகள்‌ போன்றவற்றை குறைபாடின்றி வழங்க வேண்டிய பொறுப்பினை ஏற்று செயல்படும்‌ அமைப்பாக ஊராட்சி அமைப்புகள்‌ உள்ளது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ தேவைப்படும்‌ அடிப்படை வசதிகள்‌ தொடர்பாக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில்‌ கவனத்திற்கு கொண்டு வரும் போது, அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இக்குழுக்கூட்டத்தின்‌ மூலம்‌ மேற்கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டதுடன்‌, மக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள உரிய நிதி மாவட்ட ஊராட்சி அலுவலகம்‌ மூலம்‌ ஒதுக்கப்படும்‌ எனவும்‌ அறிவிக்கப்பட்டது. 

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்‌ நிதியானது எவ்வித பாகுபாடுன்றியும்‌, அனைத்து உறுப்பினர்களுக்கும்‌ பிரித்து வழங்கப்படும்‌ எனவும்‌ மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்‌ அவர்களால்‌ தெரிவிக்கப்பட்டது.

மேலும்‌, ஊராட்சி பகுதிகளில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள்‌ குறித்து விவாதிக்கப்பட்டது. குடிநீர்‌ வசதி, சுகாதாரம்‌, தெரு விளக்குகள்‌, சாலை வசதிகள்‌, பேருந்து வசதிகள்‌ போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்‌, ஊராட்சி பகுதிகளில்‌ நடைபெற்று வளர்ச்சித ' திட்டப்பணிகளை கண்காணித்து அப்பணிகள்‌ விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌, அடிப்படை கட்டமைப்பு வசதிகள்‌, தூய்மை பணிகள்‌ மேற்கொள்ளுதல்‌, ஊராட்சி பகுதிகளில்‌ வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌, மாவட்ட ஊராட்சி நிர்வாக செலவீனங்கள்‌ மேற்கொள்ளுதல்‌, மாவட்ட ஊராட்சியின்‌ மாநில நிதிக்குழு மான்யத்திலிருந்து 2019-20ம்‌ ஆண்டுக்கான பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கும்‌ தலா ரூ.10,00,000/- வீதம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத்‌ தெரிவிக்கப்பட்டதுடன்‌, மாவட்டத்தில்‌ மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்தும்‌, நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகு வளர்ச்சிப்‌ பணிகளில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ பணிகளை மேற்கொள்ளுவது. வரவு- செலவு பட்டியல்‌ ஒப்புதல்‌ அளித்தல்‌ உள்பட பல்வேறு தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...