கோவை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூளைச்சாவு அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் அவர்களது உறவினர்களின் அனுமதியுடன் தானமாக அளிக்கப்பட்டது.
கோவை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூளைச்சாவு அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் அவர்களது உறவினர்களின் அனுமதியுடன் தானமாக அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த பழனியாண்டியின் மகன் சிவபெருமாள் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சிவபெருமாள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேல் மாடியில் நின்று வழக்கம் போல கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் சிவபெருமாள் மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது குடும்பத்தினர் சிவபெருமாளின் உடல் உறுப்புகள் வீணாக மண்ணுக்கு போவது பதிலாக யாருக்காவது பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அவரது உடலை தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து, முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. மேலும், சிறுநீரகம் சேலத்திலுள்ள மருத்துவமனைக்கும், கல்லீரல் கேஎம்சிஎச் மருத்துவமனைக்கும் பாதுகாப்பாக மருத்துவர்கள் உட்பட அனைவரின் முயற்சியால் அனுப்பப்பட்டது.