கோவை: கோவை மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தொண்டாமுத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (05.02.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஸ்குமார், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சுதாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தின் நகர்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் மழைநீர் வடிகால் அமைத்தல், சாலை வசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு செயல்படுத்தும் வளர்ச்சித்திடப்பணிகள் உரிய முறையில் செயல்படுத்த, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்று பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையத்தில் ரூ.51.98 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் மாவட்ட ஊராட்சி வள மைய கட்டிடப் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் புனரமைக்கும் பணியினை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இம்மையத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பயன்பாடற்ற பொருட்களை சுத்தம் செய்யவும், இம்மையத்திற்கு தேவையான பொருட்களை வழங்கிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தீத்திப்பாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினையும், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில், கெம்பனூர் குட்டை ரூ.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணியினையும், ஆலாந்துறை பேரூராட்சி, மூங்கில் மடை குட்டை, ஆலமரத்து பள்ளம், கொண்டதுகாளியம்மன் கோயில், வளையங்குட்டை, குறவன் காட்டு பள்ளம் ஆகிய பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும், மத்வராயபுரம் ஊராட்சி, தொம்பிலிபாளையம் பகுதியில் ரூ.3.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் மேம்பாலப் பணியினையும், தொண்டாமுத்தூர் ஊராட்சி, மத்வராயபுரத்தில், முட்டத்துராயர் கோயில் அருகில் ரூ.1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினையும், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொண்டாமுத்தூர் பேரூராட்சி, காளியண்ணன்புதூரில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகைப்பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள், ஆரோக்கியம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.