உதகையில் 17வது ரோஜா கண்காட்சிக்காக கவாத்து பணிகளை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: உதகையில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள 17வது ரோஜா கண்காட்சிக்காக இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் ரோஜா பூங்காவில் கவாத்து பணியை துவங்கி வைத்தார்.

நீலகிரி: உதகையில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள 17வது ரோஜா கண்காட்சிக்காக இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் ரோஜா பூங்காவில் கவாத்து பணியை துவங்கி வைத்தார்.

அரசு ரோஜா பூங்கா 1995ம் ஆண்டு உதகை மலர் கண்காட்சி 100வது ஆண்டு நினைவாக தொடங்கப்பட்டு சிறந்த முறையில் தோட்டக்கலை துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு ரோஜா பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 4 ஆயிரத்து 201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 31500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 2006ம் ஆண்டில் உலக ரோஜா சங்க சம்மேளனம் அரசு ரோஜா பூங்காவிற்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதினை வழங்கி சிறப்பித்தது. இந்த விருது நீலகிரி மாவட்டம், மாநிலம் மற்றும் இந்திய நாட்டிற்கும் பெருமை வாய்ந்ததாக அமைந்தது. தற்போது அரசு ரோஜா பூங்கா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமாக ரோஜா ரகங்களைக் கொண்ட பூங்காவாக திகழ்கிறது.



இந்நிலையில், மே மாதம் நடைபெறவுள்ள 17 ரோஜா கண்காட்சிக்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று கவாத்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் ஒட்டி பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும், இதில் 31,500 வகைகளை கொண்ட ரோஜா பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற உள்ள ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.



இதை கருத்தில் கொண்டு இன்று கவாத்து செய்யப்படும் ரோஜா செடிகள், வரும் மே மாதத்திற்குள் பூத்துக் குலுங்கி ரோஜா கண்காட்சியின் போது மிகவும் அழகாக காட்சியளிக்கும். இது சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக அமையும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...