கோவை ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வழியாக திருப்பூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று திருப்பூர் எம்.பி சுப்பராயன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விமான நிலையம் விரிவாக்கப் பணி உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி உக்கடம் - கணியூர், உக்கடம் - பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி, தடாகம் ரோடு மற்றும் தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை, காருண்யா நகர் முதல் அன்னூர் கணேசபுரம் என, நான்கு உத்தேச வழித்தடங்களில், மொத்தம், 136 கி.மீ., தூரத்துக்கு, 'மெட்ரோ' ரயில் இயக்க, அறிக்கை தயாரித்துள்ளது. 'மெட்ரோ' ரயில் காரணமாக, நகரின் நடுவே நடந்து வரும் மேம்பால திட்ட பணிகள் பாதிக்குமா அல்லது, மேம்பால பணிகளில் மாற்றம் செய்ய வேண்டுமா என, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன், 'மெட்ரோ' ரயில் நிறுவனத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் - கனியூர் மெட்ரோ திட்டத்தை, கோவை ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வழியாக திருப்பூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று திருப்பூர் எம்.பி சுப்பராயன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், திருப்பூர் மாவட்டமானது பின்னலாடை உற்பத்தித் தொழிலில் உள்நாட்டு, ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. கோவை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாள்தோறும் திருப்பூர் வந்து செல்கின்றனர். மேலும், கோவை - திருப்பூர் சாலையில் வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சாலை விபத்துகளும் அதிக அளவில் நிகழ்கிறது. எனவே, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும்போது அவசியம் திருப்பூர் வரையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
தற்போது கோவை - திருப்பூர் சாலையில் பெருகியுள்ள போக்குவரத்தை சமாளிக்க வேண்டும் என்றால் மெட்ரோ ரயில் திட்டம் தேவையாகும். இதனால், சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு வர்த்தகர்கள் எளிதில் திருப்பூர் வந்தடையலாம். அதே வேளையில், திருப்பூருக்கு வந்து செல்லும் தொழிலாளர்களுக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் பரிந்துரைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.