மேட்டுப்பாளையத்தில் நலிவடைந்து வரும் விவசாயிகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும், வனவிலங்கு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும், வனவிலங்கு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் வந்து சேர்வதில்லை. எனவே நாளுக்கு நாள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கும் விதமாக விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி அவர்களின் உருவப் படத்தை முகமூடியாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், காட்டுயானைகள், காட்டுப்பன்றி, மயில்கள் போன்ற வனவிலங்குகளால் தொடர்ந்து விவசாய பயிர்கள் நாசமடைந்து வருவதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தலைமடை பகுதியான மேட்டுப்பாளையம் விடுபட்டுள்ளதால் தமிழக முதல்வர் அறிவித்தபடி, அவிநாசி அத்திக்கடவு திட்டம் இரண்டை உடனடியாக அரசாணை பிறப்பித்து பணிகளை துவக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...