கோவை மாநகராட்சி மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்; 20 பேரின் கோரிக்கை மனுக்கள் ஏற்பு

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்களிடம்‌ 20 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்களிடம்‌ 20 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்களின்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்களிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோர்ந்த பொதுமக்கள்‌ 20 கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌ மற்றும்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்கள்‌ இம்மனுக்களின்‌ மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மாநகர பொறியாளர்‌ திரு.ஆ.லட்சுமணன்‌, உதவி ஆணையர்கள்‌ வி.சரவணன்‌ (கணக்கு), எம்‌.சுந்தாராஜன்‌ (பணியமைப்பு), உதவி ஆணையர்‌ (வருவாய்‌) என்‌.அண்ணாதுரை, மண்டல உதவி ஆணையர்கள்‌ தி.ர.ரவி(தெற்கு), ஏ.ஜே.செந்தில் அரசன்‌ (மேற்கு), ம.செல்வன்‌ (கிழக்கு), செந்தில்குமார்‌ ரத்தினம்‌(வடக்கு), நகர்நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, செயற்பொறியாளர்‌ பார்வதி, மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ ரெ.மதியழகன்‌, மாநகர கல்வி அலுவலர்‌ ஆ.வள்ளியம்மாள்‌, கணக்கு அலுவலர்கள்‌ லட்சுமி பிரபா (குடிநீர்‌ பிரிவு), வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர்‌ மாணிக்கம்‌ மற்றும்‌ மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...