மாநகராட்சி சார்பில் கொரானா மற்றும்‌ டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு முன்னேற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம்‌

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ ஷ்ரவன் குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ கொரானா மற்றும்‌ டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து சுகாதாரத்‌ துறை அலுவலாகளுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ ஷ்ரவன் குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ கொரானா மற்றும்‌ டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து சுகாதாரத்‌ துறை அலுவலாகளுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்கள்‌. 

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோயம்புத்தூார்‌ மாநகராட்சியில்‌ கொரானா வைரஸ்‌ தடூப்பு முன்னேற்பாடு பணிகளை சுகாதார அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ துரிதமாக மேற்கொள்ள வேண்டும்‌. பொதுமக்களிடமும்‌, பொது இடங்கள்‌, பூங்கா, கல்லூரிகள்‌, பள்ளிகளிலும்‌ பொதுமக்கள்‌ அதிகம்‌ MHD இடங்களில்‌ விழிப்புண்வு ஏற்படுத்தும்‌ பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, பொதுமக்கள்‌ காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். பொது இடங்கள்‌, வீதிகள்‌, வீடுகள்‌, அலுவலகங்களின்‌ சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும்‌, விமானங்களின்‌ மூலம்‌ வெளிநாடுகளிலிருந்து வரும்‌ வெளிநாட்டு பயணிகளையும்‌, உள்நாட்டு பயணிகளையும்‌, விமானநிலைய மையத்துடன்‌ இணைந்து பரிசோதனை ஆய்வு செய்யும்‌ பணிகளையும்‌, காய்ச்சல் அறிகுறி தென்பட்டால்‌ அவர்களை 28 நாட்கள்‌ தொடர்‌ கண்காணிப்பு மற்றும்‌ தேவையான மருத்துவ சிகிச்சைகளையும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட சுகாதார துறையுடன்‌ மாநகராட்சி இணைந்து இப்பணிகளை கவனமுடன்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில்‌ உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ மருத்துவர்கள்‌, சுகாதார பணியாளர்கள்‌ கொரானா காய்ச்சல்‌ மற்றும்‌ டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்‌. 

அனைவரும்‌ சுத்தமாக கைகளை கழுவ வேண்டும்‌ என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பணிகளை சம்மந்தப்பட்டவர்கள்‌ துரிதமாக மேற்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ,.ப., அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.

இக்கூட்டத்தில்‌ நகர்‌ நல அலுவலர்‌ மரு.கே.சந்தோஷ்குமார்‌ அவர்கள்‌, மாநகராட்சி மருத்துவர்கள்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌, சுகாதாரப்‌ பணியாளா்கள்‌ மற்றும்‌ அலுவலா்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...