எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் மத்திய அரசைக் கண்டித்து கோவையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கோவை: எல்.ஐ.சி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவை மண்டல எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: எல்.ஐ.சி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவை மண்டல எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஒருமணிநேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என ஊழியர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை கோட்ட எல்.ஐ.சி தலைமை அலுவலகம் முன்பாக எல்.ஐ.சி ஊழியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மத்திய அரசு தனது முடிவை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.



மேலும், பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் 1.25 லட்சம் எல்.ஐ.சி ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் அட்சய பாத்திரமாக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...