கோவை: பொள்ளாச்சியில் உள்ள சர்கார்பதி கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலி அங்குள்ள ஒரு தனியார் பண்ணையில் வனத்துறையினர் அமைத்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

பொள்ளாச்சியில் ஆயிரங்கால் குன்று என்ற வனத்திற்கு அருகேயுள்ள சர்கார்பதி கிராமத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புகுந்த புலி ஒன்று, அங்கு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டி மற்றும் 5 ஆடுகளை வேட்டையாடியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி வனச்சரக வனத்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின்னர், தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிய புலியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வனத்திலிருந்து தோட்டத்திற்கு வரும் இடத்தில் சுமார் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வனத்துறையினர் அமைத்த ஒரு கண்காணிப்பு கேமராவில் கால்நடைகளை வேட்டையாடுவதற்கு மீண்டும் வந்த புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
இதனிடையே, கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியை கூண்டு வைத்துப் பிடித்து குடியிருப்பு பகுதிகளுக்கு வராதவாறு அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.