திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாவதை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து சமூக ஆர்வலர் உடைந்து வீணாகும் குடிநீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாநகராட்சியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்னும் சமூக ஆர்வலர் உடைந்து வீணாகும் குடிநீர் குழாயில் இறங்கி அங்கேயே குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில் தனது போராட்டத்திற்கு பின்பாவது மாநகராட்சி அதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.