திருப்பூரில் விவசாய நிலங்கள் வழியே பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட கோரி ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: விவசாய நிலங்கள் வழியே பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு படையலிட்டு பூஜைகள் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருப்பூர்: விவசாய நிலங்கள் வழியே பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு படையலிட்டு பூஜைகள் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை, சிவன்மலை மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் விவசாய நிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த போது இந்த குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக அல்லாமல் சாலையோரங்களில் கொண்டு செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், தற்போதைய அரசு அதனை கண்டுகொள்ளாமல் விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்ல அனுமதி அளித்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு உள்ள தற்போதைய ஆட்சியாளர்கள், அம்மா அவர்களின் கொள்கை முடிவை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து படையலிட்டு பூஜைகள் செய்து பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்த விவகாரத்தில் தமிழக அரசு விவசாய நிலங்கள் வழியாக அல்லாமல் நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்ல வலியுறுத்தாத பட்சத்தில் அரளி காய் மற்றும் தென்னை மாத்திரை ஆகியவற்றை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...