வால்பாறை அருகே தேயிலை தோட்ட வனத்தில் மர்ம நபர்கள் தீ வைப்பு..! பல ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்

கோவை: வால்பாறை அருகே தேயிலை தோட்ட வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் பல ஏக்கர் மரங்கள், செடிகள் தீயில் எரிந்து நாசமாகின.

கோவை: வால்பாறை அருகே தேயிலை தோட்ட வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் பல ஏக்கர் மரங்கள், செடிகள் தீயில் எரிந்து நாசமாகின.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பாரளை தேயிலை தோட்டம். இந்த தேயிலை தோட்டத்தின் சோலையார் அணை சாலையை ஒட்டியுள்ள பாறைமேடு பகுதியில் தேயிலை தோட்டங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளன.



இந்நிலையில், விஷமிகள் சிலர் வைத்த தீயால் தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள சாலையிலிருந்து தீ பிடித்து மளமளவென பரவி வனப்பகுதியில் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் திடீர் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 



பின்னர் பசுந்தழைகளை கொண்டு தீ அணைக்கப்பட்டது.

இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏராளமான மரங்கள் செடி கொடிகள் எரிந்து சாம்பலாகின. இப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வலம் வருவதால் அவற்றை தடுக்க சிலர் தீ வைப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...