கோவையில் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி; மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய அடையாள அட்டை இருந்தும் லஞ்சம் கொடுக்காததால் விவசாயிகளை உள்ளே அனுமதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த பெண் விவசாயி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய அடையாள அட்டை இருந்தும் லஞ்சம் கொடுக்காததால் விவசாயிகளை உள்ளே அனுமதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த பெண் விவசாயி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சந்தையின் நிர்வாக அதிகாரியாக உள்ள அதிகாரி கண்ணன் வெளிமாவட்ட விவசாயிகள் இங்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் வியாபாரிகளிடம் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

விவசாயிகளை பழி வாங்கும் நோக்கில் கடைபோட நிர்வாக அதிகாரி அனுமதிக்க மறுப்பதாகவும் இன்று கோத்தகிரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை சந்தையில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.



இதையடுத்து, நீலகிரி பகுதியில் விவசாயம் செய்து கோவை உழவர் சந்தையில் விற்பனை செய்து வரும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, மனு அளிக்க வந்தவர்களில் பெண் விவசாயி ராணி என்பவர் திடீரென மயக்கம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



உழவர் சந்தையின் அதிகாரி கண்ணன் விவசாயிகளை பழி வாங்கும் நோக்கில் நடந்து கொள்வதாகவும் இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாக வேதனையுடன் கூறிய அவர்கள், அடையாள அட்டை வழங்கப்பட்டு கடந்த பல வருடங்களாக 40க்கும் மேற்பட்டோர் விற்பனை செய்து வந்த நிலையில், தங்களை அனுமதிக்க மறுப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...