கோவையில் நண்பர்கள் துரோகம் செய்த காரணத்தால் தீக்குளிக்க முயன்ற நபர்..! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

கோவை: வியாபார நஷ்டம் காரணமாகவும், நண்பர்கள் துரோகம் செய்த காரணத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் வந்த நபர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: வியாபார நஷ்டம் காரணமாகவும், நண்பர்கள் துரோகம் செய்த காரணத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் வந்த நபர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் கந்து வட்டி பிரச்சனை காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றனர். இதனை கண்ட பொதுமக்கள்,பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, மக்கள் குறை தீர்ப்பு நாளன்று பலத்த காவல் போடப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே மனு அளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மனு அளிக்க ஏராளமானோர் வந்திருந்தனர். மதியம் சுமார் 12.30 மணி அளவில் ஆட்டோவில் குழந்தைகளுடன் வந்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

இதனை தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை விரட்டி பிடித்தனர். உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி இருந்த நிலையில், அவர் மீது தண்ணீர் ஊற்றியும் அவரது உடலை துணியால் துடைத்த போலீசார், அவரை மீட்டு விசாரணைக்கு பந்தயச் சாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தந்தை தீக்குளிக்க முயன்றதை கண்ட வினோத்குமாரின் குழந்தைகள் கதறி அழுதனர். அவர்களை பெண் காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

வியாபார நஷ்டம் காரணமாகவும், நண்பர்கள் துரோகம் செய்த காரணத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முயற்சி மேற்கொள்வதாகவும் தான் இறந்த பிறகு குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும், தன்னை புதைத்த இடத்தில் பூச்செடி நட வேண்டும், தன்னை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான ஆதாரங்கள் தனது செல்போனில் இருப்பதாக கடிதத்தில் இருந்தது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத்குமார் தீக்குளிக்க முயன்றதை பணியில் இருந்த 108 ஆம்புலனஸ் மருத்துவ உதவியாளர் பாலாஜி தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...