முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு ஜீரோ. பொருளாதாரம் பற்றிய அறிவு இல்லாதவர் - ஹெச்.ராஜா விமர்சனம்!

கோவை: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு ஜீரோ என்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு இல்லாதவர் சிதம்பரம் மத்திய பஜ்ஜெட்டை விமர்சனம் செய்வதா என பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினர்.

கோவை: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு ஜீரோ என்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு இல்லாதவர் சிதம்பரம் மத்திய பஜ்ஜெட்டை விமர்சனம் செய்வதா என பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடந்த வாரம் பிரச்சாரம் செய்த பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை சிலர் தடுத்து நிறுத்தினர் இது குறித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏழு பேர் மீதும் அவர்களை தடுத்த எஸ்.டி.பி.ஜ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஏழு பேர் மீதும் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.



இந்த நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து விளக்க நோட்டீஸ் வழங்கிய பாரதிய ஜனதா தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி காவல்துறையை கண்டித்து நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த பா.ஜ.க பெண்கள் மீது ஆபாச வார்த்தைகள் கொண்டு திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியதோடு SDPI, PFI அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, நேற்றைய மத்திய பஜ்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் விமர்சனம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சிதம்பரம் ஒரு ஜீரோ என்றும் 106 நாட்கள் சிறையில் வைத்த அவரை மேலும் இரு தினங்கள் என 108 நாட்களாக சிறையில் வைத்திருக்க வேண்டும் அவரது பட்ஜெட்டால் இந்தியாவிற்கு ஏதாவது நடந்ததாக பேசினார், மேலும் சிதம்பரம் ஒரு பொருளாதார மாணவரே இல்லை எனவும் பொருளாதாரம் பற்றிய அறிவு இல்லாதவர் அப்படித்தான் பேசுவார் என கூறினார்

மேலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க நடத்திய கையெழுத்து போராட்டம் குறித்து பேசிய அவர், தி.மு.கவின் இந்த செயலால் யார் தேசத்தின் பக்கம், யார் தேச விரோதிகள் பக்கம் என எழுத்துப் பூர்வமாக எங்களுக்கு ஆதாரம் கிடைத்து விடும், அதன் பின்பு அவர்களை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி பார்ப்போம் என பேசினார்

மேலும் பாளையங்கோட்டையில் குழந்தை யேசு பள்ளியில் பிச்சைமால் என்ற மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த ஆசிரியர் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்வதுடன் பள்ளி மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...