கோவை: பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி திமுகவினர் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை: பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி திமுகவினர் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவ வாகனத்துடன் அண்ணாவின் பழமொழிகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி பேரணி காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு முடிவடைந்ததை தொடர்ந்து அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த அமைதி பேரணியில் திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, விடுதலை விரும்பி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, பகுதி கழக செயலாளர்கள் எஸ்எம்.சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், வால்பாறையில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அமமுக சார்பில் நகர கழகச் செயலாளர் நெல்லைச்செல்வன் தலைமையில் அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், வால்பாறை நகர அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.