திருப்பூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்..! 12 மாடுகளை பிடித்த மதுரை வீரருக்கு இருசக்கர வாகனம் - ராவணன் காளைக்கு மூன்றாம் பரிசு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகளை பிடித்து மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் முதல் பரிசான இருசக்கர வாகனத்தை பெற்றார். அலங்காநல்லூரில் கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ அனுராதாவின் ராவணன் காளை மூன்றாம் பரிசை தட்டிச் சென்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகளை பிடித்து மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் முதல் பரிசான இருசக்கர வாகனத்தை பெற்றார். அலங்காநல்லூரில் கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ அனுராதாவின் ராவணன் காளை மூன்றாம் பரிசை தட்டிச் சென்றது.

திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 784 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் 12 மாடுகளை அடக்கி முதல் பரிசான இருசக்கர வாகனத்தை வெற்றிபெற்றார். இரண்டாவது பரிசு மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி 11 மாடுகளை பிடித்து இரண்டாம் பரிசை வென்றார்.



இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்துரையின் காளை சிறந்த மாட்டிற்கான முதல் பரிசையும் அலங்காநல்லூர் அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புதுக்கோட்டை மாவட்டம் எஸ்ஐ அனுராதாவின் காளை மூன்றாம் பரிசையும் வெற்றி பெற்றது.

காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 72 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு களத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சிலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...