கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடந்த வாரம் பிரச்சாரம் செய்த பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை சிலர் தடுத்து நிறுத்தினர். இது குறித்து பாரதியஜனதா கட்சி சார்பில் ஏழு பேர் மீதும் அவர்களை தடுத்த எஸ்.டி.பி.ஜ , பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஏழு பேர் மீதும் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து விளக்க நோட்டீஸ் வழங்கிய பாரதிய ஜனதா தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி காவல் துறை கண்டித்து இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த பா.ஜ.க பெண்கள் மீது ஆபாச வார்த்தைகளில் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து அநாகரியமான முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி ஆர்பாட்டத்தில் SDPI, PFI அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜா.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா நேற்றைய மத்திய பட்ஜெட குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சிதம்பரம் ஒரு ஜீரோ என்றும் 106 நாட்கள் சிறையில் வைத்த அவரை மேலும் இரு தினங்கள் என 108 நாட்களாக சிறையில் வைத்திருக்க வேண்டும் என சாடினார்.
அவரது பஜ்ஜெட்டால் இந்தியாவிற்கு ஏதாவது நடந்ததா என கேள்வி எழுப்பிய அவர், சிதம்பரம் ஒரு பொருளாதார மாணவரே இல்லை எனவும் பொருளாதாரம் பற்றிய அறிவு இல்லாதவர் அப்படித்தான் பேசுவார், என கூறினார்.
மேலும், தி.மு.க குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க இன்று நடத்திய கையெழுத்து போராட்டம் குறித்து பேசிய அவர், தி.மு.கவின் இந்த செயலால் யார் தேசத்தின் பக்கம் யார் தேச விரோதிகள் பக்கம் என எழுத்து பூர்வமாக எங்களுக்கு ஆதாரம் கிடைத்து விடும், அதன் பின்பு அவர்களை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி பார்ப்போம் என கூறினார்.
மேலும், பாளையங்கோட்டையில் குழந்தை யேசு பள்ளியில் பிச்சைமால் என்ற மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டார் அந்த ஆசிரியர் இதுவரை தண்டிக்கப்படவில்லை எனவே சம்பந்தபட்ட ஆசிரியரை கைது செய்வதுடன் பள்ளி மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும், என அவர் வலியுறுத்தினார்.