நீலகிரி: இராணுவத்தில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வெலிங்டனில் உள்ள பழமையான தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் ஏராளமான இராணு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.

மெட்ராஸ் இராணுவப் பிரிவின் கீழ், போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் நினைவு தின சிறப்பு பிராத்தனைக் கூட்டம் வெலிங்டனில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமான ஜனவரி 30ம் தேதிக்கு பிறகு வரும் முதல் ஞாயிறன்று தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக் கூட்டம் எல்ராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த சிறப்பு பிராத்தனைக் கூட்டம் நாட்டிற்காக போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும், மேலும் அவர்களின் வீரத்தை நினைவு கூறும் விதமாகவும்
அனுசரிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் இராணுவ அதிகாரி, தேவாலய முறைப்படி தேவாலயத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
134 வருட பழமை வாய்ந்த தேவாலய சிறப்பு பிரார்த்தனைக்கூட்டத்தில் இராணுவத்தின் அனைத்து நிலையினரும் கலந்து கொண்டு பிராத்தனை மேற்கொண்டனர். பின்னர் இராணுவ பேண்டு வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.