குன்னூரில் மாநில அளவிலான நாய்கள் கண்காட்சி; 250 நாய்கள் போட்டியில் பங்கேற்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் மேல் நிலைப் பள்ளியில் நாய்கள் கண்காட்சி இன்று நடைப்பெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் மேல் நிலைப் பள்ளியில் நாய்கள் கண்காட்சி இன்று நடைப்பெற்றது. 



இதில் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஜெர்மன் செபர்டு, டாபர் மேன், ராட் வீலர், சைபீரியன் அஸ்கி, இராஜப்பாளையம். கிரேடேன், உட்பட 75 வகையை சேர்ந்த 250 நாய்கள் போட்டியில் பங்கேற்றன.



இந்த கண்காட்சியில் நாய்களின் உடல் வாகு, பற்கள், புத்தி கூர்மை , கீழ் படிதல் போன்றவை சோதனையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 



"உலகிலேயே சிறந்த குணமும், புத்தி கூர்மையும் கொண்ட நாய்களில் ஜெர்மன் செப்பர்ட் 2 ம் இடம் வகிக்கின்றது, அதனால் தான் காவல் துறை மற்றும் ராணுவத்தில் இவ்வகை நாய்கள் பயன்படுத்தப்படுகின்றது. ஜெர்மெனிக்கு அடுத்து ஊட்டியில் தான் ஜெர்மன் செப்பர்ட்நாய்க்கு ஏற்ற காலநிலை என்பதால் இதன் வளர்ப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நாய்களை பாதுகாப்பிற்காக வளர்ப்பதோடு அவற்றை முறையாக பயிற்றுவிக்க வேண்டும்", என்று நாய்கள் கண்காட்சியின் நீலகிரி ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி தெரிவித்தார்.



வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...