திமுக தலைவர் ஸ்டாலின் இந்து மண், பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிரி என கோவையில் ஹெச்.ராஜா பேட்டி

கோவை: கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வரதராஜபுரம் மேடு பகுதியில் 60 ஆண்டுகளாக இருந்த கனகர் அப்புச்சி கோவில் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர் என தெரிவித்தார்.



கோவை: கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வரதராஜபுரம் மேடு பகுதியில் 60 ஆண்டுகளாக இருந்த கனகர் அப்புச்சி கோவில் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர் என தெரிவித்தார்.



மேலும், காவல் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டிய அவர், கல், சிலை, போர்டு ஆகியவற்றை காவல் துறையினர் அகற்றியுள்ளனர் எனவும், 30 நாட்களுக்குள் கோவிலுக்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். 



"இது இந்து நாடு, இது இந்துக்களின் உரிமை. கோவில் ஆகும்", எனவும் தெரிவித்தார். 

பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்துசமவெளி நாகரீகத்தை சிந்து சரஸ்வதி என்று குறிப்பிட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த எ.ச்.,ராஜா, 

"ஸ்டாலின் நாகரீகம் இல்லாத நபர் என்றும், அவரை போன்ற மோசமான நபரை பார்த்தது இல்லை எனவும் சாடினார். திமுக தலைவர் ஸ்டாலின் இந்த மண், பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிரி", என தெரிவித்தார்.

திமுக, முஸ்லிம் லீக்காக மாறிக்கொண்டுள்ளது எனவும், இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கொச்சைப்படுத்தினால், விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.



மேலும், தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "முஸ்லிம்கள் குரானை அரபு மொழியில் ஓதுகின்றனர், அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏனென்றால், மொழி வேறு மதம் வேறு. அப்படியிருக்க குடமுழுக்கு சமஸ்கிருத மொழியில் நடக்க முட்டுக்கட்டை போடுபவர்கள் தீய சக்திகள். இந்து மதத்திற்கு எதிராக யுத்தம் நடைபெறுகிறது" என குற்றம் சாட்டினார். 

"தஞ்சை கோயிலில் குடமுழுக்கு தமிழில் செய்ய வேண்டும் என போராடுவது யார்?. ஜெய்னுல் ஆபிதீன், டேவிட் மணியரசனுக்கு தஞ்சை கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த என்ன அக்கறை..? இந்து மதம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா", என கேள்வி எழுப்பினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...