கேரளா: கேரளாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் மாணவி ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் மற்றொருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மருத்துவ கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்படிருக்க இன்று மீண்டும் கேரளாவைச் சேர்ந்த மற்றொருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், அவருக்கு திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இவர் சீனாவிலிருந்து நோய் தொற்றுக்கு உள்ளாகி கேரளாவிற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இரண்டாவதாக பாதிக்கப்பட்ட நபரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் கேரளாவைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.